Categories
தேசிய செய்திகள்

“உன் தாலிக்கு 90 நாள் தான் டைம்” மகளை மிரட்டிய அப்பா…. பின்னர் நடந்த கொடூரம்…!!

வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் வசித்து வருபவர் அனிஷ்(27). இவர் அந்த பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவரை படிக்கும்போது காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தினர் என்பதால், இவர்களுடைய காதலுக்கு ஹரிதா வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவர்களுடைய காதல் விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே பலதடவை பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 90 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் பாலக்காடு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

அப்போது இருவரின் பெற்றோரையும் அழைத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஹரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அனிஷ் கூறியுள்ளார். இதையடுத்து ஹரிதாவின் அப்பா ஹரிதாவை பார்த்து “உன் தாலிக்கு இன்னும் 90 நாள் தான் டைம்” என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும் ஹரிதா அனிஷ் குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் ஹரிதாவின் குடும்பத்தினர் மிரட்டி வந்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று அனிஷ் வெளியில் தனது நண்பரோடு சென்ற போது தடுத்து நிறுத்தி, ஹரிதாவின் குடும்பத்தினர் அனிஷை கம்பியால் தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இதையடுத்து காதல் திருமணம் செய்த இளைஞர் ஆவணக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |