Categories
அரசியல் மாநில செய்திகள்

“ரஜினிகாந்த் ஐயா” உங்கள் முடிவை வரவேற்கிறேன் – சீமான் கருத்து…!!

ரஜினிகாந்த அரசியலில் இருந்து விலகுவதாக கூறியதற்கு சீமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க இருந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் அவர் ஓய்வெடுக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து அனுப்பியுள்ளது. இதனால் ரஜினி அரசியலில் கட்சியை ஆரம்பிப்பாரா? மாட்டாரா? என்று குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் அரசியலிலிருந்து விலகுவதாகவும், தன்னை நம்பி வந்தவர்களை பலிகடாவாக ஆக்க விரும்பவில்லை என்றும், உடல்நிலை போன்ற காரணங்களினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அறிவித்தார்.

இதையடுத்து ரஜினியின் இந்த அறிவிப்பு குறித்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களுடைய கருத்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,”இந்திய திரை உலகின் சிறந்த கலைஞர் அய்யா ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல் நலனை கருத்தில் கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல் நலம் பெற்று கலைப் பயணத்தை தொடர என்னுடைய வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |