Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

JNU கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம்- தணிக்கை அளிக்க மறுப்பு…!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட வர்த்தமனம் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்க கேரள சென்சார் போடு மறுத்துள்ளது.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்க்குள் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி நுழைந்த ஒரு கும்பல் மாணவர்கள் மீதும், விரிவுரையாளர்கள் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தியது.  இந்த தாக்குதல் சம்பவத்தை மையமாக வைத்து மலையாளத் திரைப்பட இயக்குனர் சித்தார்த சிவா ”வர்த்தமனம்” என்ற திரைப்படத்தை  இயக்கியுள்ளார்.

நடிகை பார்வதி தெரேவேத்து இத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்க கேரளா சென்சார் போர்ட் மறுத்துள்ளது. தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டதற்கு எந்தவித காரணமும் சொல்ல வில்லை எனவும், கேரள சென்சார் போர்டில் உறுப்பினராக உள்ள பாஜக பிரமுகரான சந்தீப் குமார் என்பவரே இதற்கு காரணம் என படத்தின் தயாரிப்பாளர் சௌக்கர்  குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |