நடிகர் சூர்யாவின் படங்களை இனி ஓடிடி தளங்களிலேயே ரிலீஸ் செய்து கொள்ளட்டும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியுள்ளனர் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது . கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’ படமும் ஒரே தேதியில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் . ஆனால் கொரோனா பரவல் காரணமாக இரண்டு படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது . இதையடுத்து சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை அமேசான் தளத்தில் வெளியிட்டார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .
சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் அளித்துள்ள பேட்டியில் ‘இனி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் தயாரிக்கும், நடிக்கும் படங்களை ஒடிடி தளங்களிலேயே ரிலீஸ் செய்து கொள்ளட்டும்’ என வெறுப்பில் பேசியுள்ளனர். இதையடுத்து மாஸ்டர் மற்றும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்களுமே பெரிய பட்ஜெட் படங்கள்தான் . விஜய்க்கு இருக்கும் பொறுமை ஏன் சூர்யாவுக்கு இல்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாவதால் உற்சாகத்தில் உள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள்.