சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பரவுவது பற்றி உலகிற்கு அறிமுகம் செய்த சீன வழக்கறிஞரை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனை நிறைவேற்றியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாறி உள்ள கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதனையடுத்து சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் பரவுவது குறித்து உலகிற்கு தெரியப்படுத்திய சீன வழக்கறிஞர் ஜாங் சானை சீன அரசு சிறையில் அடைத்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் அவர் வதந்தி பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 4 ஆண்டுகள் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.