நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் மாறா. இயக்குனர் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ,சிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார் . இந்த படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சார்லி படத்தின் ரீமேக் . மலையாளத்தில் துல்கர் சல்மான் ,பார்வதிமேனன், நெடுமுடி வேணு ,கோபிநாத் ,அபர்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
A magical journey that fills UR ❤️ with love,hope,N warmth.⁰Trailer out now. https://t.co/xSa6SCno4y⁰Meet #MaaraOnPrime on Jan 8, 2021, @PrimeVideoIN⁰@ShraddhaSrinath @dhilip2488 @pramodfilmsnew @GhibranOfficial Pls let me know what you think my lovely tweeple.❤️❤️❤️❤️😘😘
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 29, 2020
இந்த படம் மிகப் பெரிய அளவு வெற்றி பெற்றதால் இதன் தமிழ் ரீமேகை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது . இந்த படம் வருகிற ஜனவரி மாதம் 8ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இன்று மாறா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது . இதில் முழுக்க முழுக்க ஊட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள அழகான பகுதிகளில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .