Categories
உலக செய்திகள்

விபத்தில் காலை இழந்த இளைஞர்…. பாதுகாப்பாக வைத்திருந்த…. ஆச்சர்ய சம்பவம்…!!

இளைஞர் ஒருவர் விபத்தில் இழந்த தன் காலை பத்திரமாக வைத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கனடாவிலுள்ள Mississauga என்ற இடத்தில் Justin fernandes என்ற இளைஞர் நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கார் ஒன்று Justin மீது மோதியுள்ளது. இதனால் இரத்த வெள்ளத்தில் கிடந்த Justin ஐ கார் ஓட்டுநர் திரும்பி கூட பார்க்காமல் சென்றுள்ளார். இந்த விபத்தில் Justin தன் காலை இழந்துள்ளார். இந்த எதிர்பாராத விபத்தால் ஏற்பட்ட இழப்பை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் தன் முகநூல் பக்கத்தில், விலங்குகளின் உடலை பதப்படுத்தி வைப்பது போல் தன் காலை செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். இதனையடுத்து ரொறன்ரோவில் உள்ள The prehistoria Natural history centre (PNHC)  என்ற அமைப்பு இவருக்கு இலவசமாக உதவியுள்ளது.

அதாவது Justin காலை இறுதிச் சடங்குகள் செய்யும் அமைப்பிடமிருந்து வாங்கி அதன் மீதிருந்த தசைகளை நீக்கிவிட்டு எலும்பை மட்டும் பதப்படுத்தி Justin னிடம் கொடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற விபத்துக்களை ஏற்படுத்தி விட்டு திரும்பிப் பார்க்காமல் பலர் சென்றுவிடுகிறார்கள். அனால் அதனால் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடு செய்ய முடியாதது. எனவே தன்னுடைய இழப்பை ஈடுசெய்ய நினைத்த Justin இவ்வாறு செய்துகொண்டார். மேலும் Justin மீது கார் மோதிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வரும் ஜனவரி மாதம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Categories

Tech |