Categories
உலக செய்திகள்

போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது… “புதிய கொரோனா” பரவியுள்ள நாடுகளின் பட்டியல்… இதோ..!!

ஆபத்தான புதிய வகை கொரோனா பரவியுள்ள நாடுகளின் பட்டியலை வெளியாகியுள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்பதை இதில் பார்ப்போம்.

கொரோனாவால் உலக நாடுகள் பல பீதியில் இருந்துவந்தன. தற்போதுதான் கொரோனாக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு ஆறுதலான நிலை உருவாகி இருந்தது. தற்போது புதிய வகை கொரோனா உலக நாடுகளை மேலும் கலக்கமடைய வைக்கின்றது.

இது 70% வேகமாக பரவக்கூடியது. செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் வேகமாக பரவி வருகின்றது. இந்த புதிய வகை பல்வேறு நாடுகளில் நுழைந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. அந்த நாடுகளின் பட்டியலில்

இங்கிலாந்து

கடந்த செப்டம்பர் மாதம் புதிய வகை கொரோனா முதன் முதலில் உருவானது இங்கிலாந்தில்தான். இதில் கட்டுப்பாட்டை மீறி வேகமாக பரவி வருகிறது. இதனால் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ்

கிறிஸ்மஸ் தினத்தன்று கொண்டாட்டத்தின் போதுதான் இந்த புதிய வகை கொரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து திரும்பிய ஒரு பிரண்ட்ஸ் நாட்டவரால் அங்கு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி

லண்டனில் இருந்து வந்த ஒரு பெண் டிசம்பர் 20 அன்று பரிசோதனை செய்தபோது அந்த அவருக்கு முதல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு தம்பதியரின் இந்த தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடா

கனடாவில் ஒரு தம்பதியருக்கு 26 அன்று வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணம் வரலாறு அல்லது அதிக ஆபத்தில் தொடர்புகள் எதுவும் இல்லை என்று அவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.
டென்மார்க் டென்மார்க்கில் இதுவரை 9 பேருக்கு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்வீடன்,

இங்கிலாந்தில் இருந்து ஒரு பயணி வந்தபோது உடல்நிலை சரியில்லாமல் அவருக்கு பரிசோதனை செய்ததில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

ஸ்பெயின்

ஸ்பெயினில் இதுவரை நான்கு பேருக்கு புதிதாக கூற்று உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் 3 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஜப்பான்

ஜப்பானில் டிசம்பர் 25 அன்று ஐந்து வழக்குகளை உறுதி செய்தது. அன்று இருந்து கடுமையான கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது டிசம்பர் 21 அன்று லண்டனில் இருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு இன்று தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெதர்லாந்து

நெதர்லாந்தின் இதுவரை 2 பேருக்கு புதிய வகைக் உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இதுவரை ஒரு வழக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா

இரண்டு வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. தென்னாப்பிரிக்கா இங்கிலாந்திலிருந்து வந்த இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நைஜீரியா

நைஜீரியாவில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த நபர்கள் மூலம் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை

இங்கிலாந்தில் இருந்து மக்கள் வருவதால் இந்தியாவுக்கு புதிய வகை வைரஸ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சுகாதாரத்துறை ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்கு வைரஸின் சிறிதளவு மாற்றம் காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள அதிகாரிகள் இங்கிலாந்திலிருந்து பயணம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |