Categories
சினிமா தமிழ் சினிமா

‘ஆரியை எதிர்த்துப் பேசினால் வெளியே அனுப்புவோம்’… கருத்து பதிவிட்ட ரசிகர்… பதிலடி கொடுத்துள்ள அனிதா சம்பத்…!!!

சமூக வலைத்தள பக்கத்தில் ‘ஆரியை எதிர்த்து பேசினால் வெளியே அனுப்புவோம்’ என்ற ரசிகருக்கு அனிதா சம்பத் பதிலடி கொடுத்துள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான அனிதா கடந்த வார இறுதியில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் . இவர் பிக்பாஸ் வீட்டில் எந்த ஒரு அணியுடனும் இணைந்து விளையாடாமல் தனித்துவமாக விளையாடுவதால் இவருக்கென தனி ரசிகர்கள் உள்ளனர். ஆனால் சில சமயங்களில் இவர் கோபத்தில் பத்ரகாளியாக மாறி பேசியதால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் ‘ஆரியை எதிர்த்து பேசியதால்தான் உங்களை வெளியே அனுப்பினோம்’என  ரசிகர் ஒருவர் பதிவிட்ட கருத்துக்கு அனிதா சம்பத் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

அதில் ‘ஆரியை எதிர்த்துப் பேசினால் வெளியே அனுப்புவோம் என்பது வாக்களிப்பவர்களுக்கு தான் அசிங்கம் . போட்டியில் நன்றாக விளையாடாதவர்களை வெளியே அனுப்ப வேண்டும் என்றுதான் பிக்பாஸில் ஓட்டுப் போடுகிறார்கள் . இதுதான் போட்டியின் விதி . உங்களைப் போன்றவர்களின் செயல்களால் தான் இன்னும் பிக்பாஸ் வீட்டுக்குள் தகுதி இல்லாதவர்கள் இருக்கிறார்கள் . இதைக்கேட்டால் ஆரி வருத்தப்படுவார் .மேலும்  எனக்கே எனக்காக வாக்களித்தவர்களின் ஓட்டுகளுடன் வெளியே வந்தது எனக்கு பெருமை’ . என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |