நாளைய பஞ்சாங்கம்
30-12-2020, மார்கழி 15, புதன்கிழமை, பௌர்ணமி திதி காலை 08.58 வரை பின்பு தேய்பிறை பிரதமை.
திருவாதிரை நட்சத்திரம் மாலை 06.55 வரை பின்பு புனர்பூசம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஆருத்ரா தரிசனம்.
ஸ்ரீ ரமண மகரிஷி ஜெயந்தி.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
நாளைய ராசிப்பலன் – 30.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி வீடு வந்து சேரும். உத்தியோக முயற்சிக்காக எடுக்கும் பணிகள் அனைத்தும் நல்ல பலனை கொடுக்கும். பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் கூடும். தனலாபம் இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் தேவையில்லாத கருத்து வேறுபாடு இருக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பாராத விரயங்கள் இருக்கும். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகள் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு இருக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு எதிர்பாராத திடீர் பணவரவு இருக்கும். பெரியவர்களின் நல்ல மதிப்பை பெறுவீர்கள். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் புதிய கூட்டணி இணைவார்கள். அதில் இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் வரவைக் காட்டிலும் செலவு அதிகமாக இருக்கும். தியானத்தில் கூட்டாளிகளின் மனஸ்தாபம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். கடன் தொல்லை தீரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு தொழில் தொடங்கும் முயற்சி அனைத்தையும் வெற்றி உண்டாகும். உத்தியோக விஷயமாக வெளியூர் செல்லக் கூடும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் அனைத்தும் கைக்கு வந்து சேரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் உண்டாகும். உத்யோகத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர் வருகை மகிழ்ச்சியை தரும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்காது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.உத்யோகத்தில் ஏற்படும் பணிச்சுமையை பணிபுரிபவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்க காலதாமதம் ஆகும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். உணவு விஷயங்களாக வெளியில் செல்லும்பொழுது கட்டுப்பாடு வேண்டும். வாகனத்தில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும். எச்சரிக்கை அவசியம்.
தனுசு
உங்களின் ராசிக்கு ஆரோக்கியம் சீராக இருக்கும். சுப காரியங்களில் இருந்த பிரச்சனை நீங்கும்.நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்கும் ஆர்வம் கூடும். உத்தியோகம்பந்தமாக வெளிவட்டாரத் தொடர்பு கிடைக்கும். சேமிப்புகள் உயரும்.
மகரம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி இருக்கும். வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் தொழிலாளர்கள் பொறுப்பாக இருப்பார்கள். சுபகாரியங்களில் அனுகூல பலன் இருக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு வீட்டில் எதிர்பாராத செலவுகள் இருக்கும். குழந்தைகள் படிப்பில் மந்தநிலை இருக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்க காலதாமதம் ஆகும். உத்தியோகத்தில் ஒற்றுமையாக செயல்படுவார்கள். லாபம் அடையும் வாய்ப்பு உண்டாகும்.
மீனம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன உளைச்சலில் இருக்கும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். இந்தியாவில் பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் உண்டாகும். உத்யோகத்தில் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.