நபர் ஒருவரை 2 பேர் சேர்ந்து கம்பியால் தாக்கிய போது அங்கிருந்தவர்கள் கண்டும் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரில் வசிப்பவர் அஜய்குமார்(23). இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த கோவிந்த்சர்ர்மா என்பவருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவிந்த் சர்மா தனது நண்பருடன் சேர்ந்து சாலையில் இழுத்து போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கிரத்த யுள்ளார். இதில் அஜய்குமார் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். இந்த வெறிச்செயலை அவ்வழியாக சென்றவர்கள் கண்டும் காணாதது போல் சென்றது அதிர்ச்சி ஏற்படுத்ததியுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் கம்பியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதையடுத்து அஜய்குமாரை தாக்கிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.