சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உழைப்பிற்கு நல்லபலனை தேடிக் கொள்வீர்கள்.
தொழில் வியாபார வளர்ச்சியால் பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பம் தொடர்பான வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டியதிருக்கும். குடும்ப நலனுக்காக கடுமையாக பாடுபடுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் நல்ல லாபம் கிடைக்கும். இன்று காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கையே வெளிப்படுத்துங்கள். தேவையில்லாத பேச்சுக்கு இடங்கொடுக்க வேண்டாம். உடல் சோர்வு போன்றவை ஏற்படும். உணவு விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். செலவுகளை சமாளித்துக் கொள்ளுங்கள். சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். இன்று நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தம் அடையவேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்.