அமெரிக்காவை கலக்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் மின்சார காரின் மாடல் 3-ஐ முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.
2016ம் ஆண்டு, டெஸ்லா நிறுவனத்தின் மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அந்தக் கார் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை. தற்போது டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வெளியீடுபற்றி அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தகவல் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் டெஸ்லாவின் முதல் கார் மாடல் ஜூன் 2021-ல் அறிமுகம் செய்யப்படும். முன்பதிவு ஜனவரியில் துவங்க வாய்ப்பு உண்டு எனக் கூறியிருக்கிறார்.
கடந்த, 2017ல் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மாடல் – 3 கார், 55 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தக் கார் முழுக்க தானியங்கி முறையிலும் இயங்கும். நாம் மேற்பார்வை செய்தால் போதும் அதுவே ஓட்டிச்செல்லும். ஒரே டச்சில் பார்க்கிங் செய்யும் வசதியும் உண்டு. ஒரு இரவு சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் செல்லும். அதற்கேற்ப அமெரிக்காவில் 2000 இடங்களில் சூப்பர் சார்ஜர் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. அது போன்று இந்தியாவிலும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். எப்படி பெட்ரோல் பங்குகள் இருக்கிறதோ இனி எதிர்காலத்தில் இந்தச் சார்ஜர் மையங்கள் புதிய தொழிலாக உருவாகும். சுற்றுச்சூழலை கெடுக்காது.