நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியா வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நிலையில், அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். அது மட்டுமன்றி அந்த ஆறு பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா சோதனைகளை தீவிரப்படுத்தி, மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் இந்தியாவிற்கு வந்த அனைவருக்கும் மரபணு சோதனை நடத்த முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மரபணு சோதனை நடத்துவதற்காக நாடு முழுவதும் 10 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.