Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் இலவசம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

டெல்லியில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு சமையலுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதார மிகவும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. இதனையடுத்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு சமையலுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன் மூலம் சுமார் 8 லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |