Categories
உலக செய்திகள்

மயானத்தில் ஏற்பட்ட மர்மம்…. கல்லறைகள் சேதம்…. வெளியான அதிர்ச்சி வீடியோ….!!

மயானம் ஒன்றில் உள்ள கல்லறைகளில் மர்மமான முறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்சில் உள்ள Fontainebleau என்ற நகரில் உள்ள மயானம் ஒன்றில் இருக்கும் கல்லறைகளின் மீது சுவஸ்திக் சின்னம் மர்மமான முறையில் வரையப்பட்டுள்ளது. மேலும் அங்கிருக்கும் யூத கல்லறைகள் மீது சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நகரின் மேயரான Frederic valletoux கூறியுள்ளதாவது 67 கல்லறைகளின் மீது வெள்ளை, பின்ங் மற்றும் சில்வர் போன்ற நிறங்களை கொண்டு ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட்டு சேதப்படுத்தபட்டுள்ளது.

மேலும் சில கல்லறைகளின் மீது பயோ பனானஸ் மற்றும் சார்லஸ் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் யூத எதிர்ப்பு குறியீடுகள் எதுவும் இல்லை மேலும் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது இழிவான செயலாகும். இது ஒரு மிகப்பெரிய குற்றம் என்று நகர மேயர் கூறியுள்ளார். மேலும் கல்லறைகளை சேதப்படுத்திய நபர் யார் என்பது மர்மமாகவே உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |