புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை, அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற பூ கடை வியாபாரி கொடூரமாக பலாத்காரம் செய்தார். அதன்பிறகு சிறுமியின் கழுத்தை அறுத்து கொன்று அப்பகுதியில் உள்ள புதரில் வீசிய சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ராஜா கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நடந்தது.
அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில் ராஜாவுக்கு இரண்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக தீவிர போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராஜா அனுமதிக்கப்பட்டார். போலீசார் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜா கடந்த ஜூலை 16ஆம் தேதி தப்பிச் சென்றார். அதன்பிறகு போலீசார் அவரை விரட்டி பிடித்தனர். இந்நிலையில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.