Categories
உலக செய்திகள்

குடியிருப்பில் மீட்கப்பட்ட…. சிறுவனின் சடலம்…. காவல்துறையினரிடம் சிக்கிய பெண் ….!!

குடியிருப்பு ஒன்றில் சிறுவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லண்டனில் சிறுவர்கள் பல்வேறு காரணங்களால் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இதனை தொடந்து தற்போது லண்டனை சேர்ந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது குறித்த விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இதன் படி, Plumstead என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவல்துறையினர் 4 வயதான சிறுவனின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர்.

மேலும் இப்பெண் அந்த சிறுவனுக்கு அறிமுகமானவர் என்பது மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த பெண் சிறுவனின் தாயாரா? அல்லது வேறு யாருமா? என்பது குறித்த விபரமோ அல்லது அவர்களின் பெயர்களையோ காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. மேலும் அப்பெண் 30 வயது உடையவர் என்ற தகவல் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது. மேலும் அந்த பெண் வரும் புதன்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளார். இதனை தொடர்ந்து வியாழக்கிழமை அன்று  சிறுவனின் உடல் உடற்கூறாய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |