கள்ளக் காதலன் மீது ஆசிட்டை வீசிவிட்டு அதை தடுக்க வந்த தாயையும் உருட்டு கட்டையால் அடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த ஷிபு என்ற திருமணமாகாத நபர், அதே பகுதியை சேர்ந்த 40 வயது திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் ஷிபுவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் நீ மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி வந்துள்ளார்.
அதற்கு ஷிபுவும் நான் அந்த பெண்ணை தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனால் அவரை பழிவாங்குவதற்காக முடிவுசெய்து அந்த பெண் கடந்த 26ஆம் தேதி ஷிபுவை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு சென்ற ஆசிட்டை எடுத்து ஷிபுவின் முகத்தில் வீசியுள்ளார். அதில் ஷிபு அலறிக்கொண்டே தன் வீட்டிற்கு ஓடியுள்ளார். அங்கும் விடாமல் துரத்திய அந்த பெண் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
தடுக்க வந்த ஷிபுவின் தாயையும் உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த தாய் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நாகர்கோயிலில் ஷிபு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிட் பட்டதால் ஷிபு கண் பார்வை பாதிக்கப்பட்டது.ஷிபு அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரின் காதலி மற்றும் 19 வயது மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.