ஜனவரி 12 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்கி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர்.
இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு வழங்க தேவையான நிதி அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. அனைவரும் ஜனவரி 12ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பை வழங்கி முடித்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது