சென்னையில் சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக தனியார் நிறுவனத்தில் சிபிசிஐடி போலீசார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாக்கரில் வைக்கப்பட்டு சிபிஐ வசமிருந்த 103 கிலோ தங்கம் மாயமானது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் திருட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சௌகார்பேட்டையிலுள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் சிபிசிஐடி எஸ்பி விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள், ஸ்டேட் வங்கி அதிகாரிகள் மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் இரண்டு மணி நேரமாக சோதனை நடத்தினர். இதற்கிடையே தனியார் நிறுவன உரிமையாளர் விஜயராஜ் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார்.