Categories
தேசிய செய்திகள்

ரயில் முன்பு பாய்ந்த அரசியல் பிரமுகர் – தற்கொலை கடிதம் சிக்கி பரபரப்பு ..!!

கர்நாடக சட்டமேலவை துணைத் தலைவரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான தர்மே கவுடா, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அங்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சட்ட மேலவையில், துணைத் தலைவராக இருந்த தர்மே கவுடாவின் உடல், சிக்மகளூரு அருகிலுள்ள கடூர் பகுதியில், ரயில்வே தண்டவாளம் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது சடலத்திற்கு அருகே தற்கொலைக் கடிதமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, சட்ட மேலவையில் பசுவதை சட்ட மசோதாவை நிறைவேற்ற முற்பட்டபோது, காங்கிரஸ் கட்சியினர், தர்மே கவுடாவை, இருக்கையிலிருந்து வெளியேற்றினர். அன்று முதலே, தர்மே கவுடா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. தர்மே கவுடாவின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான திரு.தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |