7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அண்டை வீட்டுக்காரரான 25 வயதுடைய சாமுவேல் ராஜா என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சாமுவேல் ராஜாவுக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார்.