ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடின உழைப்பின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர் தமிழக வீரர் நடரஜன். இதையடுத்து பெங்களூர் அணியின் தேவ்தட் படிக்கல், ஹைதராபாத் அணியில் நடராஜன் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் மூலம் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துவிட்டனர். இதில் தமிழக வீரரான நடராஜன் இந்த தொடரின் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக விளையாடி எதிரணிகளை மிரளவிட்டார். தனது துல்லியமான யார்கர் பந்துவீச்சின் மூலம் டிவில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் ஸ்டெம்பையை பிடுங்கி எறிந்த நடராஜன் இந்த ஒரே தொடரில் யார்கர் கிங் என்ற பட்டத்தையும் ரசிகர்களிடம் பெற்றுவிட்டார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது டெஸ்டில் உமேஷ் யாதவ் காயமடைந்துள்ளார். அவர் மூன்றாவது போட்டியில் விளையாடவில்லை என்றால் நடராஜன் இடம்பெறலாம். ஒருநாள் டி20 போட்டிகளில் போல இதிலும் நம்ம நட்டு கலக்குவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.