பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை சுமார் 2,300 பயணிகள் பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்ததாகவும், அதில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மொத்தம் 35 பேருக்கு இதுவரை தொற்று உறுதியாகியுள்ளது. 47 பேரில் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 957 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று மட்டும் 12 கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பதாகவும், 1065 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 8,747 பேர் கொரோனாவிற்க்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.