இறந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனை ஆட்டிப் படைத்து வரும் புதிய கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதலே ஜெர்மனியிலும் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய கொரனோ வைரஸ் குறித்து மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த வருடம் நவம்பர் மாதத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு புதிய கொரோனா வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தான் இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் உருமாறிய புதிய கொரனோ வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் அதே தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் உயிர் பிழைத்துள்ளார். மேலும் பிரிட்டனிலிருந்து திரும்பிய அவர்களின் மகளிடமிருந்து தான் இவர்கள் இருவருக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.