Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ஏமாந்து போயிட்டேன்…! நொந்து போன கமல்…. ரஜினி முடிவால் வேதனை …!!

அரசியலுக்‍கு வரப்போவதில்லை என்ற நடிகர் ரஜினிகாந்த் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக, நடிகரும், மக்‍கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறையில் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய திரு.கமல்ஹாசன், ரஜினிகாந்தின் இந்த முடிவு தனக்‍கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். ரஜினியை சந்தித்துவிட்டு பின்னர் செய்தி தெரிவிப்பதாகக்‍ கூறிய அவர், ரஜினி நலமுடன் இருக்‍க வேண்டும் என்றும், சென்னை சென்றவுடன் அவரை சந்திக்‍க இருப்பதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |