Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் சோம் வீட்டில் நடந்த சோகம்… குடும்பத்தினர் வருத்தத்துடன் வெளியிட்ட பதிவு…!!!

பிக்பாஸ் சோம் வீட்டில் அவர் வளர்த்து வந்த செல்லப்பிராணியான ரோனி இறந்து விட்டதாக குடும்பத்தினர் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் ஒருவர் சோம் சேகர் . இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார் . பிக்பாஸ் வீட்டில் சோம் அவரது செல்லப்பிராணி குறித்து அடிக்கடி கூறி இருப்பார் . குட்டு என்ற நாய் குட்டியை மிஸ் செய்வதாக அவர் பலமுறை தெரிவித்திருந்தார் . கடிதம் எழுதும் போதும் கூட அவர் செல்ல பிராணியான குட்டுவிற்கு கடிதம் எழுதினார்.

சமீபத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கிடைத்த பரிசுகளில் சோமுக்கு அவரது செல்லப்பிராணி குட்டு மற்றும் அதன் குட்டிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது குடும்பத்தினர் அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் குட்டுவின் மகன் ரோனி என்ற நாய்க்குட்டி இறந்துவிட்டதாக குடும்பத்தினர் வருத்தத்துடன் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் . இந்த செய்தி சோமுக்கு தெரிந்தால் நிச்சயம் உடைந்து போய் விடுவார் . செல்லப்பிராணிகளின் மரணம் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அதை  வளர்ப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும் .

Categories

Tech |