உலகில் ஒரு மூலையில் இருக்கும் பாமர மக்கள் கூட பயன்படுத்தும் ஒரு நெட்வொர்க் எது என்றால் அது ஜியோ தான்.
ஜியோவை பொருத்தவரை மிகவும் பயனுள்ள ஒரு அமைப்பு. இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் மற்றொரு நெட்வொர்க்குக்கு அழைக்கும் போது மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஜியோ அல்லாத மற்ற எண்களுக்கு இலவச அழைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஜியோ அல்லாத எண்களுக்கு ஒதுக்கப்பட்ட ஐயுசி நிமிடங்கள் வேலிடிட்டி முடிவதற்குள் தீர்ந்து விடும். இதனால் ஒரு புதிய திட்டத்தை வாங்கவோ அல்லது ஜியோ இல்லாத எண்களுக்கு அழைப்பதற்காக நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.
ஜனவரி முதல் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசம் என்ற புதிய மாற்றத்தை, தற்போது ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான உத்தரவின்படி தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு ஜனவரி 2021 முதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என விதிமுறையும் வகுக்கப்பட்டது. இருப்பினும் டிசம்பர் கடைசி வாரம் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில் டிஆர்ஏ இதுவரை புதிய ஆர்டர் கொண்டு வராத காரணத்தினால் ஜனவரி முதல் ஜியோ இல்லாத அழைப்புகள் இலவசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து பயனர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.