உருமாற்றம் பெற்ற கொரோனா பரவுவதால், அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் பரிசோதனையை கட்டாயமாக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் திரு.ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டுப் பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்வதாகவும், வெளிநாட்டுப் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.