தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கைகள் கொண்ட கோவிட் தீவிர சிகிச்சை பிரிவு பணிகளை ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.