ரஜினி அரசியலுக்கு வராதது நான் நல்லது இரு நினைக்கிறேன் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும் அதற்கான அறிவிப்பை டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தன்னுடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரவில்லை என்றும், கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த முடிவு அவருடைய ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி அளித்துள்ளார்.
அதில்,”ரஜினியின் ரசிகனாக அவர் அரசியலுக்கு வராததை நல்லது என நான் நினைக்கிறேன். இருப்பினும் அவர் நடிப்பில் கவனம் செலுத்தி நல்லபடியாக இருக்க வேண்டும். அரசியலுக்கு வந்துதான் நடிகர்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அனைவரும் நடித்து தான் சம்பாதித்தார்கள். ரஜினி இல்லையென்றால் என்ன? அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.