கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் பின்புறத்தில் இடித்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நகரை சேர்ந்தவர்கள் கோகுல் மற்றும் யோகராஜ். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் விடுமுறையை ஒட்டி பெங்களூருவில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளனர். பின்னர் அன்றைய தினம் இரவில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது கார் திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது .மேலும் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி கார் அப்பளம் போன்று நொறுங்கியுள்ளது.
சற்று நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த காரும் மினி லாரியும் அடுத்தடுத்தது மோதிக்கொண்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த யோக ராஜ் மற்றும் கோகுலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு கோகுல் அரசு மருத்துவமனைக்கும் யோகராஜ் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர் . ஆனால் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர் . பின்னால் மோதிய கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் எந்த ஒரு காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளனர் . மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.