Categories
அரசியல் மாநில செய்திகள்

திட்டங்களை செய்யணும்னு இல்லை…. எப்படியாவது ஆட்சிக்கு வரணும்…. திமுகவை விளாசிய அமைச்சர் …!!

வாக்குறுதிகளை நிறைவேற்றுவது திமுகவின் நோக்கமல்ல எனவும், எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நோக்கம் எனவும், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, அதிமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், நகைக் கடன் தள்ளுபடி, இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக திமுக வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார்.

இத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவிற்கு, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே ஒற்றை நோக்கம் என அமைச்சர் விமர்சனம் செய்தார். ஆனால், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி என, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொடுத்தது அதிமுக ஆட்சி தான் என அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Categories

Tech |