Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனா ” இந்தியாவில் 6 பேருக்கு உறுதி”… வெளியான தகவல்..!!

இந்தியாவில் ஆறு பேருக்கு புதிய கொரோனாவால் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உருமாறிய புதிய கொரோனவைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஏற்கனவே இருக்கும் வைரசை விட 70% வேகமாக பரவக்கூடியது என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு கடந்த வாரம் செயல்படுத்தி வருகிறது. எனினும் தீவிரம் அடைவதற்கு முன்பு இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த 22 பேர் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இந்நிலையில் இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த ஒரு பெண்ணிற்கு தொற்று உறுதியான நிலையில் அவர் ரயிலேறி ஆந்திராவுக்கு தப்பி ஓடிவிட்டார். அந்த பெண்ணிற்கு இது 47 வயது இருக்கும். அந்தப் பெண்ணுக்கு தான் புதிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. ஆந்திராவிலும் இந்த ஒரு பெண்ணுக்கு மட்டுமே புதிய கொரோனா பாதிப்பு இருந்து வந்தது.

அந்த பெண்ணின் மகனுக்கு கொரோனா நெகட்டிவ் என தெரியவந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மொத்தம் ஆறு பேருக்கு இந்த புதிய தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பெங்களூருவில் 3 பேர், ஹைதராபாத்தில் இரண்டு பே,ர் புனேவில் ஒரு பேர் ஆவார். நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 தேதிக்கும் இடையே 33,000 பேர் இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ளனர். 114 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் புதிய கொரோனா இருக்கிறதா என மத்திய அரசு தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறது.

Categories

Tech |