Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இனி ஹெல்மெட் இருந்தால்தான் பெட்ரோல் “பெட்ரோல் பங்க் அதிரடி ..!!

ஹெல்மெட் அணிந்து இருந்தால் தான்  பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற புதிய திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது .

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வருவோருக்கு பெட்ரோல் தரப்படமாட்டாது என்ற நடவடிக்கை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியானது திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ஆத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது .

இம்முயற்சியை தமிழகம் முழுவதும் அமல்படுத்தினால் சிறப்பான மாற்றங்களை காணலாம் என்றும் ,விபத்துக்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டமானது மக்களிடையே புதிய வகை விழிப்புணர்வாக கருதப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது.

Categories

Tech |