சேலத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்- கிருஷ்ணவேணி. வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணவேணி அப்பகுதியில் உள்ள மகளிர் சுய உதவி குழுவில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.மகளிர் சுய உதவிக்குழுவினர் கடனை திருப்பி செலுத்துமாறு கிருஷ்ணவேணியிடம் கூறியுள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் சரியான வேலையும் போதிய வருமானமும் இல்லை என்பதால் அவர் கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதனால் வேறு ஒரு நபரிடம் வட்டிக்கு வாங்கி மகளிர் சுய உதவி குழுவின் கடனை அடைத்துள்ளார் . இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது கிருஷ்ணவேணி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணவேணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேணி தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.மேலும் கந்துவட்டி கொடுமையால் கிருஷ்ணவேணி தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.