பெண் ஒருவன் தனது குழந்தையை கழுத்தை நெறித்து கொல்வதை அவரது கள்ளகாதலனே காட்டி கொடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவன் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்த போது அச்சிறுவன், தனது தாய் பெயர் சித்ரா என்றும் அவருடன் தான் செல்ல மாட்டேன் என்றும் அந்த சிறுவன் கதறி அழுதுள்ளார். இதனால் காவல் துறையினர் சந்தேகமடைந்து சிறுவனிடம் மேலும் விசாரித்துள்ளனர். இது குறித்து சிறுவனிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவரம் அறிந்த காவல்துறையினர் சிறுவனின் தாய் சித்ராவை கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். 2 மகன்களுக்கு அம்மாவான சித்ரா கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் காமராஜ் நகரை சேர்ந்த மகேஷ் என்பவரோடு காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகேஷிடம் சித்ரா வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகேஷ் சித்ராவின் இரண்டு மகன்களையும் விட்டுவிட்டு வந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நினையில் சித்ராவின் 2வது மகன் கடந்த மாதங்களுக்கு மூன் தீ விபத்தில் உயிரிழந்தார். எனவே தற்போது அதுவும் கொலையாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் சித்ராவின் கொலைப்பழி தன் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்த மகேஷ் சித்ராவுக்கு தெரியாமல், சித்ரா தனது மூத்த மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த போது யாருக்கும் தெரியாமல் செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இதனால் மயங்கிய நிலையில் இருந்த சிறுவன் உயிரிழந்ததாக நினைத்து இருவரும் அவரை உள்ள முட்புதரில் வீசி சென்றுள்ளனர்.
இதையடுத்து அந்த கொலைமுயற்சி வீடியோ தன்னுடைய நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் மகேஷ் அனுப்பி உள்ளார். சித்ரா தன்னுடைய குழந்தையை கொன்றதற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தனது நண்பர்களிடம் மகேஷ் கூறியிருக்கிறார். அந்த வீடியோவை அவருடைய நண்பர்கள் சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மற்றவர்களுக்கும் பரவியதால் உயிரிழந்து விட்டதாக நினைத்த சிறுவன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதால், சித்ரா சிக்கிக் கொள்ள இந்த வீடியோ காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சித்ராவை கைது செய்ததோடு, சித்ராவின் காதலரையும் தேடி வருகின்றனர்.