மதுரை அருகே ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியை சேர்ந்த சரோஜா தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை அன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் சரோஜாவும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 27 பவுன் தங்க நகை மற்றும் 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றது.
ஸ்மார்ட்சிட்டி பணிகள் நடைபெறும் அவுட் போஸ்ட் பகுதிகளில் பெரும்பாலான குடியிருப்புகள் இல்லாத நிலையில் வயதான பெண்ணிடம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.