Categories
மாநில செய்திகள்

ரஜினி உண்மையாக பாவம்தான்… இவர்கள் உண்மையாகவே ரசிகர்களா?… ரஜினி வீட்டு முன்பு தர்ணா…!!!

ரஜினியின் உடல்நிலையை கருதாமல் அவரின் ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை. முடிவு பற்றி அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டுமே தெரியும். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் அறிவிப்பை அடுத்து, ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனது தலைவர் உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று நினைக்காத இவர்கள் உண்மையாகவே ரசிகர்கள் தானா? இல்லை இவர்களை யாராவது இயக்குகிறார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Categories

Tech |