விவசாய உரத்திற்குள் கஞ்சா மூட்டைகளை புதைத்து கடத்த முயன்ற சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவின் விஜயவாடா பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த விவசாய உரங்களை ஏற்றிச்சென்ற லாரியை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சோதனையில் உரத்திற்குள் 1137 கிலோ கஞ்சா மூட்டைகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடைய மதிப்பு 2 கோடியே 27 லட்சத்து 46 ஆயிரம் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்பின் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுனரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பொழுது உரத்திற்குள் கஞ்சா மூட்டைகளை புதைத்து நர்சினிபட்டினத்தில் இருந்து ஹைதராபாத்திற்கு கடத்த முயன்றதாக தெரிய வந்துள்ளது. இதனைதொடர்ந்து இருவரையும் கைது செய்து அடுத்தகட்ட விசாரணையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.