Categories
தேசிய செய்திகள்

“குழந்தை இல்லை” வேறு நபருடன் சென்ற மனைவி…. அவமானத்தால்…. கணவர் எடுத்த முடிவு…!!

கணவர் ஒருவர் தன் மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் அவமானத்தில் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் வசிக்கும் தம்பதிகள் அம்ரிட்பால் சிங் – கவூர். இவர்களுக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் அம்ரிட் மனைவி கவுர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார். அங்கு மனைவியை விவாகரத்து செய்த நபர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து அவருக்கும் கவுருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர் .

இதையடுத்து சம்பவத்தன்று கவுர் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து விட்டு வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த அம்ரிட் தனது மனைவி காணாமல் போனதை அடுத்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் தன் மனைவி வேறு ஒருவருடன் ஓடி போனதை தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் 20 நாட்களாக மனைவி வராததால், அவமானத்தால் அம்ரிட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |