Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ரம்யாவின் அம்மா… கலகலப்பா வெளியான ஃபர்ஸ்ட் புரோமோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தரும் ‘பிரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்தனர் . இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வில் ரம்யாவின் அம்மா மற்றும் சகோதரர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர் . ஸ்டோர் ரூமில் இருந்து ரம்யாவின் தாயார் வந்தவுடன் என் பேட்டரி வந்துருச்சு என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ரம்யா .

சக போட்டியாளர்களிடம் அவருடைய தாயார் ‘ரம்யா எப்போதும் அழுகுற டைப் கிடையாது’ என்கிறார் அதற்கு சோம் ‘ஆனா அழ வைப்பாங்க’ என்று காமெடி செய்கிறார் . பின்னர் ரம்யாவின் தாயார் போட்டியாளர்களுக்கு அறிவுரை கூறுகிறார் . இதையடுத்து ரம்யாவிடம் அவரது சகோதரர் ‘இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்து நீ வெளியேறினால் அதற்கு காரணம் நீ கிடையாது’ என்று ரம்யாவிடம் கூற அதற்கு ஆச்சரியத்துடன் ‘வெளிய வர நிலைமை இருக்கா’ என்கிறார் ரம்யா .

Categories

Tech |