உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடுரோட்டில் ஒரு நபரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசியாபாத் என்ற நகரில் அஜய் குமார் என்ற 23 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த கோவிந்து சர்மா என்ற நபருக்கும் பூக்கடை அமைப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோபிந்த் சர்மா தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் இழுத்துப்போட்டு அஜய்குமாரின் தலையில் இரும்பு கம்பியால் மாறி மாறி தாக்கியுள்ளார். அதனால் ரத்த வெள்ளத்தில் அஜய்குமார் மிதந்துள்ளார். இந்தக் கொடூரச் செயலை பகுதியாக சென்ற அனைவரும் கண்டும் காணாததுபோல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் கம்பியால் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மக்கள் அடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் அந்த உயிரை காப்பாற்றி இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் செயலை பார்க்கும் போதே நம் நாட்டில் மனித நேயம் தொலைந்து விட்டதோ என்ற எண்ணம் தோன்றுகிறது.