சென்னையில் வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக கூறி பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சமயம் செய்வதற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் செய்யும் நபர்கள் நம்முடைய வீட்டில் சிலிண்டரில் ஏதாவது பிரச்சனை இருந்தால், அதனை சரி செய்து கொடுத்து விட்டு செல்வது வழக்கம்.
அதன்படி சென்னையில் வீடுகளில் சிலிண்டர் அலுவலகத்திலிருந்து வருவதாகவும், சிலிண்டரை சரிபார்க்க வேண்டும் என்று கூறி, பணம் கேட்டு மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து உள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடுகளுக்கு வருபவர்களிடம் அடையாள அட்டையை கேட்கும் படியும், அலுவலகத்திற்கு போன் செய்து உறுதி செய்து கொள்ளும்படியும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதனால் பொதுமக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.