Categories
தேசிய செய்திகள்

புத்தாண்டு தினத்தன்று…. தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை…!!

புத்தாண்டன்று இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் வருடம் ஜனவரி-2 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் பலரும் பலரும் பலியாகினர். இதே போன்று தற்போது மீண்டும் ஒரு தாக்குதலை தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விமானப்படைத் தளங்கள், கப்பல் படைத்தளம், மத்திய பாதுகாப்பு படையினர், காவல்துறையினர் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீவிரவாதிகளின் சதி திட்டம் குறித்து மத்திய பாதுகாப்பு துறைக்கு உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும்  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் இருந்து சில தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புத்தாண்டன்று தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது மற்றும்  லஷ்கர்-இ-தொய்பா இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் வெளியாகியுள்ளது.

.இதையடுத்து ராணுவம் மற்றும் காவல் துறையினர் உஷார் நிலையில் இருக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவித்துள்ளது மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணுவ மையங்கள் அனைத்திலும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் ஓடிஓ, டிஆர்ஓ வளாகங்கள், தாம்பரம் விமானப் படைத்தளம், இந்திய கடற்படைக்கு சொந்தமான அரக்கோணத்தில் உள்ள இந்திய கப்பற்படை வளாகங்கள் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் உட்பட மத்திய தொழில் பாதுகாப்பு மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு முடியும் வரை பாதுகாப்பு தொடர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |