இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கு புற்றுநோய் அதிகம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் தினந்தோரும் புதிய புதிய நோய்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இந்த வருடம் 13.9 லட்சமாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாகவும் உயரும் என்று ஐ சி எம் ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களுக்கு மார்பக புற்று நோயை அதிக அளவு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. அதனால் பெண்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையை விட இன்னும் 5 ஆண்டுகளில் மிக மோசமான நிலை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.