ஆப்பிரிக்க வகை கெளுத்தி மீன்களை சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அதில் குறிப்பாக உடல் ஆரோக்கியத்திற்கு இறைச்சி மிகவும் அவசியம். அவ்வாறு இறைச்சி சாப்பிடும் மக்கள் மீன்களை அதிகமாக சாப்பிடுகிறார்கள். இந்நிலையில் ஆப்பிரிக்க வகை கெழுத்தி மீன்கள் வளர்ப்பதும், விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டு இருந்தாலும் நுகர்வோர் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையும் அதிகரித்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அவ் வகை மீன்கள் பிற உயிரினங்களை உண்ணக் கூடியது என்றும், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என்றும் மருத்துவர்கள் மற்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழிக்கும் தன்மை இதற்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் கெளுத்தி மீன்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.