Categories
உலக செய்திகள்

ட்ரம்பின் தோல்வியை…. முன்கூட்டியே கணித்த…. ஜோதிடர் கூறிய ஆச்சர்ய தகவல்….!!

லண்டன் ஜோதிட வல்லுநர் ஒருவர் 2020 ல் நடந்த நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து கூறியிருக்கிறார். 

லண்டனைச் சேர்ந்த ஜோதிட வல்லுநர் நிக்கோலஸ் (65). இவர் கொரோனா வைரஸ் ஏற்படபோவதை முன்கூட்டியே கணித்துள்ளார். மேலும் டிரம்புக்கு தேர்தலில் ஏற்படப்போகும் தோல்வியையும் கணித்துள்ளார். இதுகுறித்து நிக்கோலஸ் கூறுகையில், தங்களின் ஆறாம் அறிவை முறையாக பயன்படுத்தும் மனிதர்கள் வருங்காலத்தை கணிக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதாவது தங்களின் ஆறாவது அறிவை முறையாக பழக்கப்படுத்துதல், தியானம் செய்வது, அடுத்து நடக்க இருக்கும் செயல்களை கணிக்க முயற்சி செய்வது, மற்றவர்களின் மன ஓட்டத்தை அறியும் முயற்சி போன்ற பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் யார் வேண்டுமானாலும் வருங்காலத்தை கணிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும் நிக்கோலஸ் ஆவிகளையும் உணரும் சக்தியை கொண்டுள்ளார். மேலும் தான் முன் ஜென்மத்தில் எகிப்து ராணியாகவும், ஆப்பிரிக்க மந்திரவாதியாகவும்  பிறந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் வரும் 2021 ஆம் வருடத்திற்கான கணிப்புகள் ஏதேனும் வைத்திருக்கிறாரா? என்று தெரியவில்லை.

Categories

Tech |