இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவை ரத்து தடை உத்தரவு ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து பிரிட்டனில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகள் பிரிட்டன் உடனான போக்குவரத்து சேவையை ரத்து செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா -பிரிட்டன் இடையிலான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை ஜனவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து, அதற்குப் பிறகு கடுமையான வழிமுறைகளை பின்பற்றவும் அரசு உத்தரவிட்டுள்ளது.